Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அல்லைப்பிட்டி சம்பவத்தில் கைதானவர்களுக்கு பிணை

பிப்ரவரி 11, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் பிணையில் தலா 2 ஆள் பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில், வாகனத்தில் பயணித்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி இன்றைய தினம் புதன்கிழமை நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கினை மன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து, பிணை விண்ணப்பம் செய்ததனை அடுத்து இருவருக்கும் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது.

அதேவேளை, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஹயஸ் வாகனத்தை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் இருந்து தாம் புதிதாக கொள்வனவு செய்ததாகவும் , கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் தமக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்வதற்காக வேலணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வேலையாட்களை ஒழுங்குப்படுத்தி தருவதாக கூறியதால், அவரை ஏற்ற சென்ற வேளையே சம்பவம் இடம்பெற்றதாக கைதான இருவரும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தை தான் முன்னதாக வாகனத்தை ஓடியதாகவும் , தீவு பகுதியில் வீதியில் சிறுவன் தான் வாகனம் ஓட விரும்பி கேட்ட போது வாகனத்தை வழங்கிய நிலையில் வாகனத்தை ஓட்டி சென்ற வேளை அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் மறித்த போது வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்தினார்.

அவ்வேளை மண்டைதீவு பொலிஸ் காவலரணில் நின்ற பொலிஸார் வாகனத்தை மறிக்க தயாராக இருந்த வேளை மீண்டும் வாகனத்தை அல்லைப்பிட்டி பக்கம் நோக்கி திருப்பிய வேளை எம்மை பின் தொடர்ந்து வந்த பொலிஸார் எமது வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

ஒரே ஒரு துப்பாக்கி சூட்டு சத்தம் மாத்திரமே எமக்கு கேட்டது. அதன் போதே பெறாமகன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தி மயங்கி சரிந்தார்.

பின்னர் பொலிஸார் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் , எம்மை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விட்டனர்.

வாகனத்தில் இருந்த சாணகம் , கயிறு , வாள் , வாகனத்தில் விழுந்துள்ள துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி யாழ்.பல்கலையில் குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்(Video)
அடுத்த செய்தி முல்லைத்தீவில் மெகா கோப் சிற்றி நிலையம் மீள் புனர்நிர்மாணம் செய்து திறந்து வைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நெடுந்தீவில் மக்கள் சந்திப்பு.

மார்ச் 1, 2025
இலங்கை

யாழில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையை சீர் செய்ய தீர்மானம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு உள்ள கடைத் தொகுதியில் ஏற்ப்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது!

ஜூன் 16, 2025
இலங்கை

மீன் ஏற்றிச்சென்ற கூலர் வாகனம் விபத்து

ஆகஸ்ட் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?