Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு உள்ள கடைத் தொகுதியில் ஏற்ப்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது!

ஜூன் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடைத் தொகுதியில் ஏற்ப்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் இன்று காலை தீ பரவல் இடம்பெற்றது.

இந்த தீ பரவலானது முதலில் MVM உணவகத்தில் ஆரம்பித்து அருகில் உள்ள ANSAF பாதணிக் கடைக்கு பரவி அதிக தீ விபத்தாக மாறியது.

இதில் குறித்த உணவகம் மற்றும் பாதணிக் கடை முற்றுமுழுதாக எரிந்து அழிவடைந்துள்ளதோடு அருகில் உள்ள மேலும் இரு கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இந்த தீபரவல் ஏற்பட்டதும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, கரைதுறைப்பற்று பிரதேச சபை, கடற்படையினர் , இராணுவத்தினர் விரைந்து நீர்த்தாங்கிகள் மூலம் தீ பரவலை காலை 9.30 மணியளவில் முற்றுமுழுதாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படைப்பிரிவு இல்லாமையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் உதவியை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நாடியிருந்தது. இருப்பினும் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதனால் கிளிநொச்சி மாவட்ட தீயணைப்புப் படைப்பிரிவின் உதவி கோரிக்கை இடைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தீயணைப்பு படைப்பிரிவின் அவசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்புப்பிரிவொன்று இல்லாமையினாலேயே கூடுதல் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவொன்றை ஏற்படுத்துவதுதொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில். போதைப்பொருள்களுடன் 4 இளைஞர்கள் கைது!
அடுத்த செய்தி பாதசாரி உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பரீட்சை நிலையத்தில் மோதல் – ஐவர் காயம்

பிப்ரவரி 22, 2026
இலங்கை

பாராளுமன்ற அமர்வை உடனடியாக கூட்டுக – நாமல் எம்.பி தெரிவிப்பு!

டிசம்பர் 9, 2025
இலங்கை

யாழ் . பல்கலை கலைப்பீடாதிபதிக்கு எதிரான வழக்கு – வகுப்புத்தடை மீள பெறப்பட்டது.

பிப்ரவரி 16, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளை நிறைவு செய்த விராட்.

ஆகஸ்ட் 20, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?