ஒட்டவா நகரில் நிலவும் கடுமையான வீட்டு வசதித் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக, மாநகர நிர்வாகமும் தேசிய தலைநகர் ஆணையமும் (NCC) இணைந்து புதிய ஒப்பந்தம் ஒன்றை முன்மொழிந்துள்ளன.
ஒட்டவா நகரில் மத்திய அரசுக்குச் சொந்தமாக உள்ள நிலங்களில், குடியிருப்பு வீடுகளை மிக விரைவாகக் கட்டுவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
வழக்கமாகப் பல ஆண்டுகாலம் நீடிக்கும் அனுமதி நடைமுறைகளைச் சுருக்கி, திட்டங்களை விரைவாகத் தொடங்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
இந்த நிலங்களில் கட்டப்படும் வீடுகளில் கணிசமான பகுதி குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய மக்களுக்காக (Affordable Housing) ஒதுக்கப்படும்.
அதேவேளை, அனுமதி நடைமுறைகளின் காலக்கெடு குறைக்கப்பட்டாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்கும் நடைமுறைகளில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
