Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிவுல் ஓயா திட்டம் பிழையானது – ரிஷார்ட் தெரிவிப்பு

பிப்ரவரி 8, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காகவே காடுகளை அழித்து உருவாக்கப்படும் கிவுல் ஓயா திட்டம் பிழையானது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா சாளம்பைக்குளத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மதராசாவினை ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

‘பிரஜா சக்தி’ என்ற ஒன்றை உருவாக்குகின்ற பொழுது நாங்கள் சந்தோஷமடைந்தோம். அதன் ஊடாக குறித்த பிரதேசங்கள் முன்னேறும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது.

ஆனால், குறித்த நிர்வாகத்தைச் மேற்கொள்கின்ற போது குறித்த கிராமத்தில் இயங்குகின்ற கிராம அபிவிருத்தி சங்கம் உட்பட பல்வேறுபட்ட அமைப்புக்களுடனோ கல்விமான்கள் உடனோ, கலந்துரையாடாடப்படுவதில்லை.

மாறாக கடந்த தேர்தலிலே தற்போதைய அரசாங்கத்திற்கு போஸ்டர் போன்ற வேலைகளைச் செய்தார்களை பிரஜா சக்திக்கு தலைவர்களாக நியமித்து அவர்களுக்குக் கீழே அவர்கள் விரும்புகின்ற பலரை உறுப்பினர்களாக நியமித்துச் செயல்படுகின்ற ஓர் அமைப்பாக அது மாறி இருக்கிறது.

தேசிய மக்கள் சக்தியினை சாராத உள்ளூராட்சி உறுப்பினர்கள் குறித்த பிரஜாசக்தியில் தலைவர்களாகவோ அல்லது உறுப்பினர்களாகவோ சேர்க்கப்படாமல் செயல்படுவது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயல்பாடு.

இந்த நாட்டிலே பேரினவாத சக்திகளுடைய கடந்த காலச் செயல்பாட்டினால் தனிநாடு கேட்டு ஒரு சமூகம் போராடிய வரலாறு இருக்கின்றது.

இந்த நாட்டிலே இன மத பேதங்களுக்கு அப்பால் அநுரகுமார திசாநாயக்க என்ற ஒருவரை ஜனாதிபதியாக்குவதற்காக யாழ்ப்பாணம் தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை வாழ்கின்ற மக்கள் இன மத பேதங்களுக்கு அப்பால் அவருக்கு ஆதரவு தெரிவித்ததற்குரிய நன்றிக்கடனாக, இன்று அந்தந்த கிராம ஊரவர்கள் தாங்கள் விரும்பித் தெரிவு செய்த உள்ளூராட்சி உறுப்பினர்களைப் புறம் ஒதுக்கிவிட்டு யாரோ ஒருவர் வந்து அல்லது அந்தக் கட்சிக்கு போஸ்டர் ஒட்டினாரோ அல்லது அந்தக் கட்சிக்கு வால் பிடித்தாரோ அவரை ஊர் தலைவராக நியமிக்கின்ற ஒரு செயல்பாடு இந்த நாட்டிலே ஒரு சாபக்கேடாக நாங்கள் பார்க்கிறோம்.

75 வருட சாபக்கேடு என்று பேசியவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எந்தவொரு அரசாங்கமும் செய்யாத ஒரு மோசமான செயலை செய்து கொண்டிருப்பது அவர்களுடைய எதிர்கால அரசியலுக்கு ஒரு பேர் ஆபத்தாக அமையும்.

கிவுல் ஓயா திட்டம் என்பது தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களிலே பாரம்பரியமான ஒரு பெரிய காட்டை அழித்து உருவாக்கப்படவுள்ளது. குறிப்பாக சாளம்பைக்குளம், பெரியமடு, அல்லது மடு ஆகியவை 2009க்கு பின்னரே காடுகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், குறித்த காடானது பல தசாப்தங்களுக்கு முன்னர் காடாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதாகும்.

இந்நிலையில் குறித்த திட்டத்திற்காக பழமையான 5,000 ஏக்கர் உள்ள காட்டை அழிக்கவுள்ளனர்.

முந்தைய செய்தி யாழில் கண்டெடுக்கப்பட்ட மோட்டார் குண்டு
அடுத்த செய்தி கொஹுவலயில் தீ விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

நாட்டில் நாளை மழை பெய்யும் சாத்தியம்.

பிப்ரவரி 23, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

தொடர் தோல்விகள் – இறுதி இடத்திற்கு தள்ளப்பட்டது சென்னை அணி

ஏப்ரல் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சஜின் வாஸ் குணவர்த்தன விளக்கமறியலில்

மார்ச் 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பாக சஞ்சீவ தம்மிக்கவின் அறிவிப்பு!

ஆகஸ்ட் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?