கியூபெக் மாகாணத்தின் எரிசக்தித் துறையில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள ‘Bill 9′ மசோதா மீதான பொதுக் கலந்தாலோசனைகள் நேற்று ஆரம்பித்துள்ளன.
மாகாணத்தின் எதிர்கால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இந்தச் சட்டம் மிக முக்கியமானது என கியூபெக் அரசு கருதுகிறது.
2050-ஆம் ஆண்டிற்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலுமாகக் குறைப்பதற்கு, தற்போது இருப்பதை விட இரண்டு மடங்கு கூடுதல் மின்சாரம் கியூபெக் மாகாணத்திற்குத் தேவைப்படுகிறது.
புதிய சட்டத்தின்படி, எந்தெந்தத் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் அமைச்சருக்கு வழங்கப்படும் எனத் தெரியவருகின்றது.
இதன் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
