ஒட்டாவா நகரத்தில் இந்த ஆண்டு ஐந்தாவது தட்டம்மை (Measles) நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பல்வேறு இடங்களுக்குப் பயணித்தவர்களை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஒட்டாவா பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தட்டம்மை நோய் பாதிப்புக்கு உள்ளான அந்த நபர், அண்மையில் மேற்கு கனடாவுக்குச் சென்றிருந்தபோதே, நோய்த்தொற்றுக்கு ஆளானதாகத் தெரிய வருகிறது.
இந்த நபர் சென்று வந்த இடங்களின் பட்டியல் தற்போது, வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் இருந்தவர்கள் அடுத்த 21 நாட்களுக்கு தம் உடலில் ஏற்படும் அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும் என்று, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
