அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் அதிகமான வெப்பம் நிலவியமையால் அங்கு பாரிய காட்டுத்தீ பரவியுள்ளது.
இதனால் சுமார் 960 ஹெக்டேயர்கள் எரிந்துள்ளதுடன், 250 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு போராடி வருகின்றனர்.
இக்காட்டுத்தீயால் 20 க்கும் மேற்பட்ட சொத்துக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
