Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

ஜனவரி 26, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

நீதிமன்றத்தைப் புறக்கணித்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வருதல் மற்றும் அவர்களுக்கு எதிராகச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.

பத்தரமுல்லை பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதிமன்றத்தைப் புறக்கணித்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான விசேட நடவடிக்கை பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் 2026 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் கடந்த 2024 ஆம் ஆண்டில் 10 சந்தேகநபர்களையும், 2025 ஆம் ஆண்டில் 11 சந்தேகநபர்களையும் வெளிநாடுகளில் இருந்து எம்மால் நாட்டுக்கு அழைத்து வர முடிந்தது.

அதற்கமைய இந்த வருடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து மற்றுமொரு சந்தேகநபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்தச் சந்தேகநபரை கைது செய்வதற்கு இலங்கை பொலிஸாருக்கு வழங்கிய ஒத்துழைப்பு, பங்களிப்பு மற்றும் வழிகாட்டல்களுக்காக இந்திய அரசுக்கும், இந்திய தூதரகத்திற்கும், இந்திய பொலிஸ் அதிகாரிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் தற்போது வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் 3 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் பல கொலைச் சம்பவங்கள், கொலை முயற்சி, காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல குற்றங்களுடன் தொடர்புடையவராவார்.

கடந்த 4 வருடங்களுக்கு அதிக காலம் வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்து இவ்வாறான குற்றச்செயல்களை முன்னெடுத்து வந்துள்ளார்.

தற்போது குறித்த சந்தேகநபரால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் எந்த நாட்டிற்குச் சென்று தலைமறைவாகியிருப்பினும், நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்துத் தப்பிச் செல்பவர்களுக்கு எதிராகச் சட்டத்தை அமுல்படுத்த சகல நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

முந்தைய செய்தி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு
அடுத்த செய்தி நிபா வைரஸ் அச்சுறுத்தல் – கண்காணிப்பு தீவிரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நத்தார் பிறப்பை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட யாழ் மணிக்கூட்டு கோபுரம்!

டிசம்பர் 24, 2025
இலங்கை

யாழில் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது!

செப்டம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மயிலிட்டி கொமோண்டோ பங்களா முன் 13ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

ஜூலை 17, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

டொரோன்டோ தமிழ்ச் சமூக மையத்திற்கு “1லட்சம் டொலர் நன்கொடை” A.M.R.அறிவிப்பு!

பிப்ரவரி 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?