Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா

ஜனவரி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்திப்பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் மூன்றலில் இன்றைய தினம் (18) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் விருந்தினர்களாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் அழைக்கப் பட்டதோடு, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருவாட்டி தனுஜா முருகேசன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர்,கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் குறித்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 மணியளவில் வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் சிறப்பாக ஆரம்பமானது.

இதன் போது விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன் கலந்து கொண்டு சிறப்பித்த தோடு அழைக்கப்பட்ட ஏனைய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது சம்பிரதாய பூர்வமாக புதிர் எடுக்கும் நிகழ்வுகள் திருக்கேதீஸ்வரம் மாளிகைத் திடலில் இடம்பெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் சம்பிரதாய பூர்வமாக திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு ஆழைத்து வரப்படுவதுடன் அங்கு விசேட நிகழ்வு தொடர்ந்து இடம்பெற்றது.

மேலும் பொங்கலைச் சிறப்பிக்கும் வகையில் மன்னார் மாவட்ட கலை மன்றங்களுக்கான ஆற்றுகை பொருட்களும், விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணப் பொருட்களும் வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்
அடுத்த செய்தி மன்னார் மாவட்ட செயலாளராக டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று தென்படும்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தொட்டலங்க கண்ணாவிற்க்கு ஆயுள் தண்டனை உத்தரவு!

அக்டோபர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

 புற்றுநோயால் வருடத்திற்கு 200 குழந்தைகள் உயிரிழப்பு!

செப்டம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வறட்சியைத் தாங்கக்கூடிய பயிரினங்களை வடக்கில் அறிமுகப்படுத்த நடவடிக்கை

மார்ச் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?