நாட்டின் மிக உயரிய குடிமை விருதான ஓர்டர் ஆஃப் கனடா& (Order of Canada), இந்த ஆண்டு 80 சிறந்த சாதனையாளர்களுக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உலகப்புகழ் பெற்ற தடகள வீரர் ஆண்ட்ரே டி கிராஸ் மற்றும் பிரபலபத்திரிகையாளர் நார்டுவார் (Nardwuar) உள்ளிட்டோர் அடங்குவர்.
கவர்னர் ஜெனரல் மேரி சைமன் இன்று இந்த அதிகாரப்பூர்வப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் வளர்ச்சி மற்றும் ஒருமைப்பாட்டிற்குப் பங்களித்த மருத்துவர்கள், கலைஞர்கள் மற்றும் பழங்குடியினத் தலைவர்கள் இதில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்த ஆண்ட்ரே டி கிராஸ், தடகளத்தில் காட்டிய திறமைக்காக மட்டுமின்றி, தனது அறக்கட்டளை மூலம் இளைஞர்களுக்குச் செய்து வரும் சமூகப் பணிகளுக்காகவும் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நான்கு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை எல்லி பிளாக், விளையாட்டுத் துறையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய பங்கிற்காக கௌரவிக்கப்பட்டுள்ளார்.
குழந்தைகளுக்கான பாடகர் ராஃபி (Raffi) மற்றும் நாட்டின் பிரபல பத்திரிகையாளர் நார்டுவார் ஆகியோருக்கு அவர்களின் கலைப்பணிகளுக்காக விருது வழங்கப்பட்டுள்ளது.
1967- ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த ஆர்டர் ஆஃப் கனடா & விருது, இதுவரை 8,250-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உழைப்பால் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்" என கவர்னர் ஜெனரல் பாராட்டு தெரிவித்துள்ளார்.


