இன்றையதினம் அமுலுக்கு வரும் வகையில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள், கூட்டுறவுச் சங்கங்களுக்கு சலுகை வட்டியிலான கடன் வழங்கும் திட்டமொன்றை நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி பெரும்போக பருவத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த கடன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆண்டுக்கு 7 சதவீத சலுகை வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபா வரை கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறாகப் பெறப்படும் கடன்தொகையை 180 நாட்களுக்குள் மீளச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.


