Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஆசிரியர் தொழிற்சங்கம் முன்னெடுத்துள்ள பணி பகிஷ்கரிப்பு

டிசம்பர் 30, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பல்கலைக்கழகங்களின் துறைத்தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகளின் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கம் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.

வவுனியா பல்கலைக்கழக வாயிலில் இன்று கூடிய பல்கலைக்கழக ஆசிரியர் தொழிச்சங்க பிரதிநிதிகள் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் திருமதி பி. தர்மதா,

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அடையாள பணி பகிஷ்கரிப்பினை இன்று நடத்துகிறது.

பல்கலைக்கழகங்களின் துறைத்தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகளின் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக சட்ட திருத்தம் பற்றிய பிரேரணை ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.

இதன் அடிப்படையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் டிசம்பர் மூன்றாம் தேதி அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அக்கடிதத்தில் துறைத்தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகளின் நியமனம் தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையும் மறு அறிவித்தல் வரை உடனடியாக ஒத்திவைக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக மானியங்களின் இத்தகைய முறையற்ற தலையீடானது அரசு பல்கலைக்கழகங்களின் சுயாதீன செயல்பாட்டை பாதிக்கும் என்பதன் அடிப்படையில் பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமானது அதன் எதிர்ப்பினை கடுமையாக வெளிப்படுத்தியதுடன் மூன்றாம் திகதி அனுப்பப்பட்ட அக்கடிதத்தினை மீளப்பெற வலியுறுத்தி இருந்தது.

எனினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது துறைத்தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகளின் நியமனம் தொடர்பான தமது கருத்தினை நியாயப்படுத்தி மீண்டும் ஒரு பதில் கடிதத்தினை டிசம்பர் 18ஆம் தேதி அனுப்பியிருந்தது.

இதன் அடிப்படையில் பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான எந்த ஒரு சாதகமான முடிவும் எட்டப்படாத நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமானது அக்கடிதங்களை மீளப்பெற வலியுறுத்தி இன்றைய தினம் ஒரு அடையாள பணி பகிஷ்கரிப்பு ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தது.

இந்த வகையில் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் இத்தொழிற்சங்க நடவடிக்கையில் பங்குபற்றி எமது முழு ஆதரவினையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி மன்னாரில் சுகயீன போராட்டத்தை அறிவித்த கிராம அலுவலர்கள்
அடுத்த செய்தி யாழில். சங்கிலி அறுத்த குற்றத்தில் நால்வர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காவாக மாற்ற எதிர்ப்பு!

டிசம்பர் 15, 2025
இலங்கை

நூறு ஆரம்ப சுகாதார மையங்கள் நிறுவ திட்டம்!

செப்டம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு!

நவம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலைக்கு விஜயம் மேற்க் கொண்ட கனேடிய உயர்ஸ்தானிகர்

ஜனவரி 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?