அமெரிக்காவின் டெக்சாஸ் கால்வெஸ்டனுக்கு அருகே விமான விபத்தொன்று பதிவாகியுள்ளது. மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்படி இவ்விமணத்தில் 7 பேர் பயணித்திருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், டெக்சாஸ் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் அவ்விடத்தில் நிலவிய மூடுபனி என வானிலை ஆய்வாளர் கெமரூன் பாடிஸ்ட் தெரிவித்துள்ளார்.


