இலங்கைக்கு சற்று முன்னர் விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தற்போது நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
இதன்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும் சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட கடிதத்தையும் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இந்நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று பிற்பகல் சந்தித்துக் கலந்துரையாடினார். இரு நாட்டு உறவுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து இந்தச் சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
