Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் வயோதிபர்களை மகிழ்விக்க ஒளி விழா கொண்டாட்டம்.

டிசம்பர் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த ஒளி விழா நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை (22) மாலை மன்னார் பட்டி தோட்டத்தில் அமைந்துள்ள வயோதிபர் இல்லத்தில் இடம்பெற்றது.

மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஒஸ்மன் டெனி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ கலந்து கொண்டார்.

ஓய்வு நிலை ஆயர் தலைமையில் குறித்த வயோதிபர் இல்லத்தில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஒளி விழா நிகழ்வுகள் இடம் பெற்றது.மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அலுவலகர்கள் இணைந்து ஒளி விழா நிகழ்வை முன்னெடுத்தனர்.குறித்த வயோதிபர் இல்லத்தில் உள்ள வயோதிபர்களை மகிழ்விக்கும் வகையில் கரோல் பாடல்களும் இசைக்கப்பட்டது.

இதன் போது குறித்த வயோதிபர் இல்லத்தில் உள்ள வயோதிபர்கள் ஆடல்,பாடல்களில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து வயோதிபர்களுக்கு ஓய்வு நிலை ஆயர் மற்றும் எழுத்தூர் பங்குத்தந்தை லோரன்ஸ் அடிகளார் ஆகியோர் இணைந்து அன்பளிப்பு பொருட்களையும் வழங்கி வைத்தனர்.

நாடு பூராகவும் அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் இவ்வருடம் மன்னார் மறைமாவட்ட பங்குகளில் ஒளி விழாவை நடத்தாது அதற்கான செலவுகளை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு பகிர்ந்து அளிக்குமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அறிவுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் பல்வேறு சுமைகளையும் துன்பங்களையும் மனதில் சுமந்த நிலையில் குறித்த வயோதிபர் இல்லத்தில் வசித்து வருகின்ற வயோதிபர்களை மகிழ்விக்கும் வகையில் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை குறித்த ஒளி விழா நிகழ்வை முன்னெடுத்தமை சிறப்புக்குறிய விடயமாகும்.

முந்தைய செய்தி கிரவல் அகழ்விற்கு எதிராக மக்கள் ஆர்பாட்டம்(Video)
அடுத்த செய்தி வவுனியாவில் கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை வெளியானது!

செப்டம்பர் 7, 2025
இலங்கை

இ.போ.சபைக்குரிய பேருந்துகள் போதிராஜ மாவத்தையில் இருந்து முன்னெடுக்கப்படும்!

செப்டம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

மார்ச் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாராளுமன்றத்தில் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்த தடை!

நவம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?