Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னார் நகர எல்லைக்குள் கடைகள் ஏல விற்பனை – டானியல் வசந்தன்

டிசம்பர் 20, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மன்னார் நகர எல்லைக்குள் நத்தார், புதுவருட பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளுக்கு கடைகள் அமைக்க இடம் ஏல விற்பனை மூலம் வழங்கப்பட்ட நிலையில் நகர சபைக்கு சுமார் 4 கோடிக்கும் அதிகமான வருமானம் கிடைக்க பெற்றுள்ளதாகவும், கடந்த காலங்களில் ஊழல் இடம்பெற்றுள்ளமைக்கு குறித்த வருமானம் ஒரு எடுத்துக் காட்டு என மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை (20) காலை மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் நகர சபையினால் 2025 ஆம் ஆண்டுக்கான பண்டிகைக்கால வியாபார நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏல விற்பனை மூலம் இடம் வழங்கப்பட்டது.மன்னார் நகர சபை பிரிவில் 339 தற்காலிக வியாபார நிலையங்களை அமைக்க இடம் அடையாளம் காணப்பட்டது.

அதில் 284 கடைகள் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை வரை ஏல விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதன் ஊடாக மன்னார் நகரசபைக்கு 4 கோடியே 85 ஆயிரத்து 866 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

மேலும் 55 கடைகள் ஏல விற்பனைக்கு செல்ல உள்ளது.அதனூடாக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். குறித்த வருமானங்களை வைத்துக் கொண்டு மன்னார் நகர சபை பிரிவில் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த குறித்த நிதி 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் பயன்படுத்தப்பட உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த நிலை ஏற்பட்ட போது நகர சபைக்கு வருமான இழப்பு ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது.ஆனால் கடந்த காலங்களை விட வெளிப்படை தன்மையுடன் ஏல விற்பனை இடம் பெற்றமையால் இம்முறை 4 கோடிக்கும் மேற்பட்ட வருமானம் கிடைக்க பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் முந்தைய நிர்வாகங்களினால் எவ்வாறு ஊழல் இடம் பெற்றுள்ளது என்பதற்கு இது ஒரு முன் உதாரணமாக இருக்கிறது.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மிகவும் குறைந்த அளவிலான வருமானமே மன்னார் நகரசபைக்கு கிடைக்கப்பெற்றது.பண்டிகை கால வியாபாரங்களை பாரிய அளவில் மன்னாரில் மேற்கொண்டு வரும் பல வியாபாரிகளிடம் நான் வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டுள்ளேன்.அவர்களின் வாக்கு மூலங்களை அடுத்த சபை அமர்வில் முன் வைக்க இருக்கிறேன் என கூறியுள்ளார்.

முந்தைய செய்தி யாழில் 200 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது
அடுத்த செய்தி துணை அமைச்சர்கள் மட்டத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளார் பிரதமர் மார்க் கார்னி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஐயப்பன் யாத்திரை தொடர்பில் வர்த்தமானி வெளியீடு!

நவம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழுக்கு கடத்தி வரப்பட்ட 20 இலட்ச ரூபாய் பெறுமதியான தேக்க மரக்குறிகள்

மார்ச் 8, 2026
இலங்கை

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு

ஜனவரி 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஹசலகாவில் மண்சரிவு – 7 பேரின் உடல்கள் மீட்பு

நவம்பர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?