நாட்டில் சீரற்ற காலநிலையால் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சில மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை (சிவப்பு) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை மண்சாரிவு அபாய எச்சரிக்கையானது பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


