கியூபெக்கில் 3 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தமை குறித்த விசாரணை வழக்கில், லாவல் நீதிமன்றம் நான்கு அரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
2023-ஆம் ஆண்டு கியூபெக்கில், 3 வயது சிறுவன் ஒருவன் தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தான்.
யாசின் மெஹென்னாவி (Yacine Mehennaoui) என்ற இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசரணைகள் நடைபெற்று வந்தன.
தமது கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்தியதாக அந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அரச வழக்கறிஞர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் இணைந்து அளித்த ஒத்துழைப்புப் பரிந்துரையின் அடிப்படையிலேயே 4.5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
