Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மீட்புப் பணிகள் தீவிரம் – 24,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பணியில்!

நவம்பர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மேல் மாகாணத்தில் ஏற்படக்கூடும் என்று எதிர்வு கூறப்படுகின்ற அனர்த்த நிலைமையில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக 7,989 இராணுவ வீரர்கள் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை கொண்டு செல்வதற்கும் முப்படைகள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன்படி, நாடு முழுவதும் 24,156 பாதுகாப்பு வீரர்கள் 2,453 பேரின் உயிர்களைக் காப்பாற்றி 5,400 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடு முழுவதும் 488 பாதுகாப்பு மையங்களில் உள்ள 43,925 பேருக்கு உணவு மற்றும் ஏனைய தேவையான வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் பதுளை, பல்லேகலே, திகன, மருதானை, களனிமுல்ல மற்றும் மட்டக்குளிய ஆகிய இடங்களில் இராணுவம் 08 உணவு தயாரிப்பு தளங்களை நிறுவியுள்ளதுடன். அதற்கு மேலதிகமாக ஒவ்வொரு முகாமிலும் இடம்பெயர்ந்தவர்களுக்காக உணவு தயாரிப்பதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரண சேவைகளை வழங்குவதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் 80 பேர் கொண்ட குழுவுடன் இந்திய விமானப்படையின் IL-76 விமானம் இன்று காலை நாட்டை வந்தடைந்தததுடன், தற்போது கொழும்பு துறைமுகத்தில் உள்ள இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்தின் இரண்டு விமானங்கள் கம்பஹா மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளில் அனர்த்த நிலைமையைக் கண்காணிக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மேலும் தெரிவித்துள்ளார்

முந்தைய செய்தி மன்னாரில் 24 ஆயிரத்து 331 குடும்பங்கள் பாதிப்பு
அடுத்த செய்தி சீரற்ற கால நிலையால் பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு – 191 மாயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மார்ச் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்புத்துறை இறங்குதுறை 140 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு

செப்டம்பர் 19, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி…

மார்ச் 24, 2025
இலங்கை

யாழில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு

ஜனவரி 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?