Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

டிட்வா புயலின் தீவிரம் அதிகரிப்பு

நவம்பர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டிட்வா புயலின் தீவிரம் குறித்து அறிவித்துள்ளார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா.

இவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

டிட்வா புயலின் வெளி வளையமானது தற்போது வடக்கு மாகாணத்தை தொட்டுள்ளது. இதன்படி டிட்வா புயலின் மையம் இன்று இரவு வட மாகாணத்துக்குள் பிரவேசிக்கும் வாய்ப்புள்ளது.

டிட்வா புயல் வெளி வளையத்தையும் தொட்டிருப்பதனால் படிப்படியாக மழை அதிகரித்து மிகக் கனமழை கிடைக்கும், காற்றின் வேகமும் அதிகரிக்கும். பல குளங்களுக்கு அதிகளவான நீர் வரத்தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும்.

இங்கு பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. சில குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. மேலும் சில குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளன. ஆகவே குளங்களுக்கு அண்மித்துள்ள மக்களும், தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்களும் மிக அவதானமாக இருப்பது அவசியம். தேவையேற்படின் இருள்வதற்கு முன் பாதுகாப்பான இடங்களுக்கு நகருங்கள்.

குறிப்பாக யாழ்ப்பாண நகரை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் ஏனைய மக்கள் நிலைமையைப் பொறுத்து இருள்வதற்கு முன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.

முக்கியமாக மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்கரையோரங்களில் Storm Charge எனப்படும் கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உட்புகும் அபாயம் உள்ளது. ஆகவே வடக்கு மாகாணக் கடற்கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும். மத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணத்திலும் தொடர்ந்த கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி மறு அறிவித்தல் வரும்வரை உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு!
அடுத்த செய்தி இலங்கைக்கு நிவாரணங்களை வழங்கியது இந்தியா!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

ஜூலை 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

ஜூலை 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தேசபந்து தென்னகோன் மீண்டும் விளக்கமறியல்!

மார்ச் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஊஞ்சல் தடி முறிந்து விழுந்த சோகம் – 5 மாதக் குழந்தை பரிதாப பலி!

ஜூலை 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?