போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவு நாளான இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பிரஜைகள் குழு ஒன்றிணைந்து மாவீரர் நாளை அனுஸ்டித்திருந்தனர்.
வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பிரஜைகள் குழுவின் தலைவர் கோ. ராஜ்குமார் ஈகை சுடரை ஏற்றி வைத்திருந்தார்.
இதனை அடுத்து மாவீரர்களின் பெற்றோர் திருவுருவ படங்களுக்கு விளக்கியதோடு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தி இருந்தனர். இதன்போது பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
