நாட்டில் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவு நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி,பதுளை,கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலி மாவட்டத்தின் நாகொடை, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வலல்லாவிட, புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
