ஒன்றாரியோவில் கனடாவின் அலர்ட் ரெடி (Alert Ready)எனும் தேசிய அவசர எச்சரிக்கை அமைப்பின் வருடாந்த சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அமைப்புகள் மட்டுமே இந்த எச்சரிக்கைகளை வெளியிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இது தொடர்பில் தெரிய வருகையில்,
பொதுவாக மனிதர்களின் உயிருக்கு அபாயம் ஏற்பட்டால் மட்டுமே இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன.
அலர்ட் ரெடி (Alert Ready) இணையத்தளத்தின் தகவலின்படி, இந்த ஆண்டில் ஒன்றாரியோவில் மொத்தம் 230 அவசர எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்நாட்டு நேரப்படி இன்று மதியம் 12.55 அளவில் கையடக்க தொலைபேசிகளில் நினைவூட்டல் ஒலி எழுப்பப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.
