மொன்ட்ரியல் உயர்நிலைப் பள்ளி ஒன்றின் முன்னாள் ஆசிரியரான எலி அம்ராம் (Elie Amram), ஒரு தசாப்தத்திற்கு முன்னர் 16 வயது மாணவியை பாலியல் ரீதியாக பயன்படுத்திய (sexually exploiting) வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
கியூபெக் நீதிமன்ற நீதிபதி எரிக் டி சாம்பிளேன் (Éric de Champlain) இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
2011-ஆம் ஆண்டில் அம்ராம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவியுடன் மீண்டும் மீண்டும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், பாலுறவு உட்பட பல செயல்களைப் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே செய்துள்ளார்.
தற்போது 43 வயதாகும் அம்ராம், குற்றம் நடந்த சமயத்தில் உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகவும், பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி பட்டம் பெறும் வரை அந்த உறவு உணர்வுப்பூர்வமானதாக மட்டுமே இருந்தது என்று அம்ராம் கூறிய கூற்றை கியூபெக் நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.
எலி அம்ராமுக்கான தண்டனை குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
