வவுனியா நொச்சிமோட்டை ஆற்றுக்குள் காரொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று மாலை வவுனியாவில் இருந்து யாழ்திசை நோக்கி சென்றுகொண்டிருந்த கார், நொச்சிமோட்டை பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் வீழ்ந்தது.
குறித்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற சாரதி சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். குறித்த விபத்தினால் அங்கு பொருத்தப்பட்டுள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குழாயில் வெடிப்பு ஏற்ப்பட்டுள்ளதுடன் நீர் வெளியேறி வருகின்றது.
இதேவேளை வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை காணப்படுவதால் சாரதிகள் தமது வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
