கியூபெக் லிபரல் கட்சித் தலைவர் பாப்லோ ரோட்ரிக்ஸ் (Pablo Rodriguez), கட்சியின் சபைத் தலைவர் பதவியிலிருந்து மார்வா ரிஸ்கியை (Marwah Rizqy) நீக்கி அறிவித்துள்ளார்.
நம்பிக்கை மீறல்" காரணமாக மார்வா ரிஸ்கியை (Marwah Rizqy) லிபரல் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக அக்கட்சி இன்று அறிவித்தது.
இது கட்சியின் தலைமைப் பொறுப்பில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கியூபெக் தேசிய சட்டமன்றத்தில் லிபரல் கட்சியின் தொடர்ச்சியை உறுதி
செய்வதற்காக, புதிய தலைவர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
போன்டியாக் (Pontiac) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் (MNA) ஆண்ட்ரே ஃபோர்டின் (André Fortin) புதிய சபைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லாஃபோன்டெய்ன் (LaFontaine) தொகுதியின் MNA மார்க் டங்குவே (Marc Tanguay) கட்சி கொறடாவாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
