இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து சவூதி அரேபியாவின் மக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் சென்ற பேருந்து முப்ரிஹத் பகுதியில் தீப்பிடித்து எரிந்ததில் பேருந்திலிருந்த 42 இந்தியர்களும் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இந்த விபத்தானது இன்றையதினம் (17) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்தில் 20 பெண்கள், 11 சிறுவர்கள் உட்பட மொத்தமாக 42 பயணம் செய்துள்ளனர். இவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
