திருகோணமலையில் மீண்டும் அதே இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பௌத்த பிக்குகள் பிரித் ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டு மீண்டும் அதே இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
நேற்று நள்ளிரவு மக்களின் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் தொடர் போராட்டத்திற்கு பின்பு சிலை உடனடியாக அகற்றப்பட்டு இன்று காலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, காவல்துறையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் பௌத்த பிக்குகள் சகிதம் பொலிசாராலேயே அந்தச் சிலை கொண்டுவரப்பட்டு, மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.
