ஏறாவூரில் பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்தி சென்ற வர்த்தகரை தாக்கிய இரு பொலிசாரைஉடனடியாக பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏறாவூர் மயிலம்பாவெளி பகுதி பிராதன வீதியில் மதுபோதையில் சிவில் உடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இரு பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்ற வர்த்தகர் ஒருவரை நிறுத்தி அவர் மீது தலைக்கவத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாய மடைந்துள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட இரு பொலிசாரும் அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை(18) இரவு 7.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு பொலிசாரையும் உடனடியாக நேற்றையதினமான வியாழக்கிழமை பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.