Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு நகரில் பிரதான போதை வியாபாரி உட்பட மூவர் கைது

நவம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரதான வியாபாரி உட்பட 3 வியாபாரிகளை நேற்று சனிக்கிழமை இரவு (15) கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 7 ஆயிரம் மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் சம்பவ தினமான நேற்று இரவு ஊழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் நகரிலுள்ள அம்மன் கோவில் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றை முற்றுகையிட்டனர்.

இதன் போது ஹோட்டல் அறையில் தங்கியிருந்துக் கொண்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதான வியாபாரியான முறக்கொட்டாஞ்சேனை காளி கோவில் வீதியைச் சேர்ந்த தனுஷன் என்பவரை 3200 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் அவருடன் இருந்த இன்னொரு வியாபாரியான சித்தாண்டி 2ம் பிரிவைச் சேர்ந்த விதுஷன் என்பவரை 1300 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சித்தாண்டி பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சித்தாண்டி 2ம் பிரிவைச் சேர்ந்த போதை வியாபாரியான சதீஸ்வரன் என்பவரை 2500 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை நிகழ்வுகள்!

ஜூன் 7, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நைஜீரியாவில் தடகள வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து!

ஜூன் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

ஏப்ரல் 27, 2026
இலங்கை

கரைச்சி பிரதேச சபையில் இன்று ஊடக சந்திப்பு

பிப்ரவரி 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?