நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளின் போது, கீழ்த்தரமான அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற சபை நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தவேளை சபாநாயகர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதை தொடர்ச்சியாக தாம் அவதானித்து வருவதாக சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது உரையின் போது சக பாராளுமன்ற உறுப்பினரான இளங்குமரனை செம்மறி போன்ற அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தியமை பேசுபொருளாக மாறியிருந்தமை குறிப்பித்தக்கது.
