, தம்மென்னாவெட்டிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்தவர் நவகத்தேகம, குருகெட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.
இவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது வீதியின் குறுக்கே வந்த காட்டு யானை தாக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
