வியன்ஸ் ஆணையத்தின் (Viens Commission) பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில், மெதுவாகச் செயற்படுகின்றமை குறித்து கியூபெக் அரசாங்கம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
பொதுச் சேவைகளில் பூர்வகுடி மக்களுக்கு எதிரான அமைப்பு ரீதியிலான பாகுபாடுகளை விசாரித்த வியன்ஸ் ஆணையம் 2019 ஆம் ஆண்டில், தனது பரிந்துரைகளை, கியூபெக் அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தது.
எனினும் அந்த பரிந்துரைகளை அமுற்படுத்துவதில் கியூபெக் அரசாங்கம் மெத்தனப்போக்கைக் காண்பித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் ஒம்ப்யூட்ஸ்மேன் மார்க்-ஆண்ட்ரே டவுட், மாகாணத்தில் அமைந்துள்ள சீர்திருத்த மையங்களில் உள்ள பூர்வகுடி இளைஞர்களுக்குத் தங்கள் தாய்மொழியில் பேசுவதற்கு விதிக்கப்பட்ட தடைகள் தொடர்ந்தும் நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
