Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

அதிரடியில் மிரட்டிய சுந்தர் – ஆஸி.,யைத் தோற்கடித்தது இந்தியா!

நவம்பர் 2, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா தோற்றது.

இந்த சூழலில், முக்கியமான மூன்றாவது போட்டி இன்று (நவ.,02) ஹோபர்ட், பெல்லிரைவ் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஹெட் (6), இங்லீஷ் (1), மார்ஷ் (11), ஓவன் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. ஆனால், மறுமுனையில் தனியொரு ஆளாக நிலைத்து நின்று விளையாடிய டிம் டேவிட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 38 பந்துகளில் 74 ரன் குவித்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

பேட்டிங் வந்த ஸ்டொய்னிஸ் மற்றும் ஷார்ட் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். ஸ்டொய்னிஸ் 39 பந்துகளில் 64 ரன் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் சேர்த்தது.

இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டும், துபே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து பேட் செய்த இந்திய அணிக்கு துவக்கம் சுமாராக அமைந்தாலும், அபிஷேக் ஷர்மா (25), சூர்யகுமார் யாதவ் (24), திலக் வர்மா (29) ஆகியோர் தங்களின் பங்களிப்பை கொடுத்தனர். இறுதியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் அதிரடியாக விளையாடினார். 23 பந்துகளில் 49 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், இந்திய அணி 19.3 பந்தில் இலக்கை அடைந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில், 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.

முந்தைய செய்தி புதிய செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவிய இஸ்ரோ; சிஎம்எஸ்03 புதிய சாதனை படைத்தது!
அடுத்த செய்தி யாழில் கெரோயினுடன் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

மும்பை – சன்ரைசஸ் அணிகள் இன்று மோதல்

ஏப்ரல் 23, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

107 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கும் பாகிஸ்தான் அணி.

ஜூன் 16, 2024
விளையாட்டு

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி!

செப்டம்பர் 16, 2025
விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் தலைவராக மீண்டும் பாபர் அசாம்

ஏப்ரல் 1, 2024
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?