இலங்கையின் மட்டக்களப்பு வாகனேரி கொழும்பு வீதியின் அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை இன்று மாலை வாழைச்சேனை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
இந்த கைக்குண்டு தொடர்பாக அரச புலனாய்வுத் துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இக்குண்டு மீட்கப்பட்டுள்ளது .
இக்கைக்குண்டு கடந்த காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பினரால் கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன், கடந்த வாரம் வடமுனை வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் இதே போன்றதொரு மேலும் ஒரு கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
