வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவருடைய இல்லத்திட்கு சென்றார். அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துக் கொண்டார்.
இந்த கொலைக்கு நீதியான முறையில் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சபைக்கு தெரிவான ஏனைய உறுப்பினர்களால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஒருவரை இவ்வாறு படுகொலை செய்வது, நாட்டில் கொலைக் கலாசாரத்தின் மற்றொரு அங்கமாகவுள்ளது என குறிப்பிட்டார்.
