Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வலி. வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர்

பிப்ரவரி 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.

வலி. வடக்கில் மக்கள் பாவனைக்கு கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட வசாவிளான் கிழக்கு, வசாவிளான் மேற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய 5 கிராம அலுவலர் பிரிவுகளும் மக்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலைமை இன்னும் காணப்படுகின்றது.

பாதுகாப்புத் தரப்பினரின் வேலி பின்நகர்த்தப்படாமையால் இவ்வாறான சூழல் நிலவுகின்றமை தொடர்பில் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அத்துடன் இந்தப் பகுதியிலுள்ள பலாலி சித்தி விநாயகர் பாடசாலையின் இடிபாடுகளுடன் கூடிய கட்டடத்தையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த காலங்களில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தின் மைதானத்தின் ஒரு பகுதி பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ளதையும் ஆளுநர் சென்று பார்வையிட்டார்.

மயிலிட்டித்துறைமுகத்தில் இந்திய மீனவர்களது படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால் மீனவர்கள் எதிர்கொள்ளும் இடர்கள் தொடர்பாகவும் ஆளுநர் ஆராய்ந்தார்.

மயிலிட்டி வைத்தியசாலை வீதி, கடந்த காலங்களில் கொங்கிரீட் வீதியாக அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை மூடி சுகாதாரத் திணைக்களத்தால் வேலி அடைக்கப்பட்டுள்ளதாக மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலும் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதேபோல காங்கேசன்துறையிலுள்ள சிறுவர் பூங்காவுக்கான பாதையை பாதுகாப்புத் தரப்பினர் மூடி வைத்துள்ளமையால் எழுந்துள்ள நெருக்கடி தொடர்பாகவும் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும், காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு அருகில் பிரதேச சபையின் பாதையை மூடி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதையும் ஆளுநர் பார்வையிட்டார்.

அத்தடன் கீரிமலையிலுள்ள செம்மண்வாய்க்கால் இந்து மயானத்துக்கான பாதை பற்றைகள் மூடி உள்ளமையையும் அதனால் மக்கள் தனியார் பாதை ஊடாகச் சென்று வருகின்றமையும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் அதனையும் ஆளுநர் நேரடியாகப் பார்வையிட்டிருந்தார்.

இது தொடர்பில் துறைசார் தரப்புக்களுடன் கலந்துரையாடி தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநர் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு செலவீனங்களை வெளியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய
அடுத்த செய்தி அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையை மேம்படுத்துவதற்கான திட்டமுன்மொழிவை சமர்ப்பிக்க பணிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் தற்போதும் சீரற்ற காலநிலை – 310 பேர் நிலை என்ன?

நவம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் – 40 வருட கடூழிய சிறைத்தண்டனை

நவம்பர் 21, 2025
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இங்கிலாந்தில் மின்சாரம் எரிவாயு கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம்

ஜனவரி 27, 2026
இலங்கை

யாழில் வர்த்தக கண்காட்சி ஆரம்பம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?