ஒன்டாரியோவின் ப்ரோக்வில் (Brockville)-லின் கிழக்கே அகஸ்டா
டவுன்ஷிப் (Augusta Township) பகுதியில் நடந்த ஒற்றை வாகன விபத்தில் ஒட்டாவாவைச் சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை நடந்த இந்தச் சம்பவம் குறித்து ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) விசாரணை நடத்தி வருகிறது.
விபத்து அகஸ்டா டவுன்ஷிப்பில் உள்ள ராக்கி சாலை (Rocky Road)
மற்றும் கவுண்டி சாலை 26 (County Road 26) சந்திப்பு அருகே
நடந்துள்ளது.
வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி வாய்க்காலுக்குள் சென்றுள்ளது.
வாகனத்தில் தனி ஒருவராகப் பயணித்த அந்த நபர், வாகனத்திற்கு வெளியே கண்டெடுக்கப்பட்டார்.
சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.