Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பெரிய வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது

அக்டோபர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் பெரும் வசதி படைத்தவர்கள் வீடுகளை இலக்கு வைத்து , அவர்களின் வீடுகளுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து , நோட்டமிட்டு , வசதியானவர்கள் வீட்டில் திருடி வந்தார் எனும் குற்றச்சாட்டில் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தங்க நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டு இருந்தன.

அவை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் ,வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , குறித்த இளைஞன் அவ்வீட்டில் திருடுவதற்கு முன்பதாக , அந்த வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கி இருந்ததாகவும் , வாடகைக்கு தங்கியிருந்து, திருட்டில் ஈடுபட போகும் வீட்டை நோட்டமிட்ட பின்னர் , வாடகை வீட்டில் இருந்து வெளியேறி ஓரிரு நாட்களில் தான் இலக்கு வைத்த வீட்டில் திருட்டினை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக யாழ்ப்பாணத்தில் வேறு வீடுகளிலும் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளனவா என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை , கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 07 பவுண் நகை மற்றும் பணம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

முந்தைய செய்தி வெனிசுலாவில் இரகசிய நடவடிக்கைகளுக்கு ட்ரம்ப் அங்கீகாரம்
அடுத்த செய்தி சீரற்ற வானிலையால் 112 குடும்பங்கள் பாதிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு .

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி இடம்பெற்ற மக்கள் மாநாடு

மே 3, 2026
அண்மைய செய்திகள்உலகம்

மூட நம்பிக்கையால் பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்!

ஜூன் 17, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

 புற்றுநோயால் வருடத்திற்கு 200 குழந்தைகள் உயிரிழப்பு!

செப்டம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?