கியூபெக் மாகாணத்தில் பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்கும் நோக்குடன் செயல்படும் Office québécois de la langue française (OQLF) என்ற மொழிக் காவலர் அமைப்பு, விதிமுறைகளுக்கு இணங்காத வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
பொதுமக்களின் புகார்கள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 10,000 ஆய்வுகளை இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது.
2024 ஏப்ரல் 1 முதல் 2025 மார்ச் 31 வரையிலான நிதியாண்டில், இந்த பிரெஞ்சு மொழிக் காவலர் அமைப்புக்கு மொத்தம் 10,371 புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 14% அதிகமாகும்.
மேலும், இது ஐந்து ஆண்டுகளுக்கு முன் பதிவான புகார்களின் எண்ணிக்கையை விட சுமார் 140% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிகப்படியான புகார்கள், பிரெஞ்சு மொழியின் பாதுகாப்பு மற்றும் தங்கள் மொழியுரிமை மதிக்கப்படுவது குறித்து பொதுமக்களின் அக்கறை அதிகரித்துள்ளதையே காட்டுவதாக பிரெஞ்சு மொழிக் காவலர் அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.