Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸ் காவலரண்களை அமைக்குமாறு கோரிக்கை

அக்டோபர் 11, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பாடசாலை மாணவர்களுக்கு பச்சைகுத்தும் நிலையங்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைக்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட செயலர்கள் கோரியுள்ளனர்.

வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் ஆகியோருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையிடலில் மாவட்டச் செயலர்களால் தத்தமது மாவட்டங்களில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தெரிவிக்கப்பட்டன.

அதன் போதே மாவட்ட செயலர்கள் அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில், பெண் பொலிஸாரின் பற்றாக்குறை, சட்டவிரோத மணல் அகழ்வு, அரச காணி தொடர்பான பிணக்குகளில் பிரதேச செயலர்களுடன் இணைந்து செயற்பட பொலிஸார் தவறுகின்றமை ஆகிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கசிப்பு விற்பனை மிகப் பிரதான பிரச்சினையாக உள்ளதாகச் சுட்டிக்காட்டிய மாவட்டச் செயலர், அங்கு கசிப்பு விற்பனையில் ஈடுபடும் குடும்பங்கள் தொடர்பான விவரங்களை திரட்டியுள்ளபோதிலும் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் நிலவுதாகக் குறிப்பிட்டார்.

அதேபோன்று சட்டவிரோத மணல் அகழ்வு, மரம் மற்றும் கால்நடைகள் கடத்தல் என்பனவும் நடைபெறுவதாகச் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி என்பன இடம்பெறுவதாக மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

கால்நடைகள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு மண்டைத்தீவு சந்தி மற்றும் புங்குடுதீவு மடத்துவெளி ஆகிய இடங்களில் பொலிஸ் காவலரணங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஒலிபெருக்கி பாவனைக்கான கட்டணம் பொலிஸார் அறவிடுகின்றமையால் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படும்போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற பொறுப்பும் பொலிஸாருக்கு உள்ளது எனக் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு பெரும் பிரச்சினையாக உள்ளதாக மாவட்டச் செயலர் குறிப்பிட்டார்.

கல்லாறை அண்மித்து காட்டை அழித்து மணல் அகழ்வு நடைபெறுகின்றது எனத் தெரிவித்தார். அங்கு அகழப்படும் மண்ணை விற்பனைக்காக சேகரித்து வைக்கும் இடத்துக்கு கொண்டு வரப்படும் பாதையில் பொலிஸ் காவலரண் அமைப்பதன் ஊடாக இதனைத் தடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கௌதாரிமுனை கடற்கரைக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு இளையோர் வருவதாகவும் அங்கு மதுபானம் அருந்தி விட்டு முரண்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்ட மாவட்டச் செயலர் பொலிஸ் காவலரண் அங்கு அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம், பாடசாலை மாணவர்களுக்கு பச்சைகுத்தும் நிலையங்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைக்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது
அடுத்த செய்தி வடக்கில் மண்ணெண்ணையில் ஓடும் பேருந்துகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இன்று இரவு வியட்நாமுக்கு பயணமாகிறார் ஜனாதிபதி

மே 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நிபா வைரஸ் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

ஜனவரி 29, 2026
இலங்கை

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

மார்ச் 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முத்துநகர் விவசாயிகள் போராட்டம்-ஜனாதி பதியின் கவனத்திற்கு!

அக்டோபர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?