Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக்கிய வர்த்தமானியை நீக்கு

ஜூலை 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழில் 2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் மக்களின் காணிகளுக்கான வர்த்தமானியை உடனடியாக நீக்க வேண்டுமென சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் இணைப்பாளர் ஜான்சன் பிரிடாரோ தெரிவித்தார்.

யாழ் மயிலிட்டியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13 ஆவது வாரமாக இடம் பெற்று வரும் காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் காணிகள் மக்களுக்கு என கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் மக்களின் காணிகளை விடுவிப்பதில் தயக்கம் காட்டுகிறது.

2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்ட வலி வடக்கு மக்களின் சுமார் 6000 ஏக்கர் காணிக்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை இரத்துச் செய்யப்படவில்லை.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மற்றும் பலாலி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பிலும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆனால் பாதிக்கமட்ட மக்களின் குரல்களுக்கு தற்போதைய அரசாங்கமும் செவி சாய்க்காமல் கடந்த கால அரசாங்கங்களைப் போல அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு இயங்கும் அரசாங்கமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களுடைய வளமான காணிகளை கையகப்படுத்தி 35 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இன்று வரை பாதிக்கப்பட்ட மக்கள் தமது காணிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாதுகாப்புத் தேவையென காணியை சுவீகரித்துவிட்டு மக்களின் காணிகளில் விவசாயம் செய்த இராணுவம், மரக்கறிகளை விற்று வருமானம் ஈட்டுகிறார்கள் இது நாட்டின் திறைசேரிக்கா செல்கிறது.

ஆகவே மக்களின் காணிகள் மக்களுக்கு எனக் கூறிவரும் அரசாங்கம் விரைவாக மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதோடு வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கருக்கான வர்த்தமானியையும் உடனடியாக நீக்க வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைமை அலுவலகத்தில் தீ பரவல்
அடுத்த செய்தி மன்னாரில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ் . பல்கலை மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிழக்கு மாகாண ஆளுநரினால் 43.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

ஜூலை 28, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இந்தோனேசியா ஜாவா தீவில் மண்சரிவு அபாயம்!

நவம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னர் மீனவ பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

மார்ச் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?