சீனாவின் சார்பாக பொருளாதார உளவு பார்த்ததாக (economic espionage) குற்றம் சாட்டப்பட்ட கியூபெக் மாகாண மின்சார நிறுவனமான ஹைட்ரோ-கியூபெக்கின் முன்னாள் ஊழியர் மீதான வழக்கு விசாரணை, தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் உள்ள சில ரகசிய வர்த்தகத் தகவல்களை பொது மன்றத்தில் விவாதிப்பதைத் தடுக்கக் கோரி ஹைட்ரோ-கியூபெக் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது
வழக்கு விசாரணையை முன்னெடுக்குமிடத்து, இந்த உளவு வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சில ஆதாரங்கள், ஹைட்ரோ-கியூபெக் நிறுவனத்தின் வணிகம் மற்றும் வாடிக்கையாளர்கள் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிடும் அபாயம் உள்ளது என்று அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் நீதிபதி ஜீன்-பிலிப் மார்கூக்ஸிடம் (Jean-Philippe Marcoux) தெரிவித்தார்.
இந்தத் தகவல்கள் தனியுரிமை கொண்டவையாக வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீதிமன்றத்தில் இந்த கோரிக்கை குறித்துத் தீர்வு எட்டப்படும் வரை வழக்கு விசாரணையைத் தொடர முடியாது என்று நீதிபதி மார்கூக்ஸ் அறிவித்தார்.
ஹைட்ரோ-கியூபெக்கின் கோரிக்கைகள் குறித்து நாளை ஒரு பிரத்யேக விசாரணை நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.