குறிகட்டுவான் இறங்குதுறைக்கு முன்னரான நடைபாதையுடன் கூடிய வீதிப் புனரமைப்பு 299.80 மில்லியன் ரூபா பெருந் திட்டத்திற்கு அமைய (Master Plan) அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருடன் பங்குபற்றுதல்களுடன் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் T. பாஸ்கரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குரூஸ், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.