மனிதர்களைப் போலவே இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கும் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படக் கூடிய (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மென்பொருட்கள் மற்றும் மின்னணுக் கருவிகள் அதிகம் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் அசாம் மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் குறித்த தகவல்களை வழங்க அங்கிதா என்ற AI செய்தித் தொகுப்பாளரை அந்த மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிமுகப்படுத்தியுள்ளார்.
குறித்த AI தொகுப்பாளர் அமைச்சரவை முடிவுகளை அசாமிய மொழியில் ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு வழங்குகிறது.
அரசின் தகவல்களை விரைவாகவும், சரியாகவும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
