கனடா வருவாய் முகவரகம் (CRA) பயங்கரவாதத் தொடர்புகள் குறித்த கருதுகோளுடன், சில தொண்டு நிறுவனங்களை ஏன் தணிக்கை செய்தது என்பதற்குத் ”தக்க காரணத்தை வழங்க முடியவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் புலனாய்வு கண்காணிப்பு அமைப்பான தேசியப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஆய்வு முகவரகம் (NSIRA) நடத்திய நீண்ட விசாரணையிலேயே, இவ்விடயம் வெளிவந்துள்ளது.
இந்த முடிவுகள், கனடா வருவாய் முகவரகத்தின் முடிவுகள் ‘பாரபட்சம் மற்றும் பாகுபாட்டால்’ தூண்டப்படலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளன.
கனடா வருவாய் முகவரகத்தின் ‘மீளாய்வு மற்றும் ஆய்வுப் பிரிவு’ ஆனது, தணிக்கை செய்த சில தொண்டு நிறுவனங்களுக்கு பயங்கரவாதத்தொடர்பு இருப்பதற்கு, நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று தேசியப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஆய்வு முகவரகம் கண்டறிந்துள்ளது.
2009 முதல் 2022 வரை தணிக்கை செய்யப்பட்ட அனைத்து தொண்டு நிறுவனங்களில், 67 சதவீதம் இஸ்லாமிய நிறுவனங்கள் எனவும் 19 சதவீதம் சீக்கிய நிறுவனங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.