சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகராலயத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு இராஜதந்திர அலுவலகங்களிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.
