கட்டார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள், காங்கோவில் சுமார் 80 பேரைக் கொன்றுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் கனிம வளங்கள் நிறைந்த கிழக்குப்பகுதியில் அவற்றைக் கைப்பற்ற 100க்கும் மேற்பட்ட கிளர்ச்சிப் படைகள் முயற்சித்து வருகின்றன.
இந்த நிலையில் நீண்ட காலமாக அங்கு தொடர்ந்து போர் நடைபெற்று வருகின்றது. சமீபத்தில், அண்டை நாடான ருவாண்டாவின் ஆதரவு பெற்ற, ‘எம் – 23’ கிளர்ச்சிப் படையினர், காங்கோவின் 2 முக்கிய நகரங்களைக் கைப்பற்றினர்.
காங்கோ நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல் காரணமாக இலட்சக் கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
