2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாகும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த தொடரானது நவம்பர் 02 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரவுண்ட் ராபின் முறையில் இந்தத் தொடரின் முதல் சுற்று நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன.
முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடவுள்ளதையடுத்து இலங்கை மகளிர் அணி இந்தியாவுக்குப் புறப்பட்டுள்ளனர்.