நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு, இலங்கை முழுவதும் உள்ள சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நீட்டிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இன்று பிற்பகல் முதல் அமுலுக்கு வரும் வகையில், பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டம்: குருவிட, பெல்மடுல்ல, எலபாத, எஹலியகொட, அயகம, நிவிதிகல, இரத்தினபுரி, கிரியெல்ல போன்ற இடங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் மலைப்பாங்கான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மண்சரிவு அபாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
